கவர்னர் உரை துவங்கியதும் திமுக. காங்., எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர். இதற்கு கவர்னர்,' அனைவரும் உட்காருங்கள்' என தமிழில் கூறினார். இருப்பினும் எதிர்கட்சியினர் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு அவையில் இருந்து வெளியேறினர்.
சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், தற்போது தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது. மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும். ஆனால் அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட கவர்னர் உரை வாசிக்கப்படுகிறது. மாநில சுயாட்சிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் கவர்னர் ஆய்வு செய்வது ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் விரோதமானது. இதனை தமிழக அரசு பாராட்டி வருகிறது. பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களை முதல்வர் அழைத்து பேசவில்லை. இதனை அடிப்படையாக வைத்து கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.
தினகரனுடன் இணைந்து செயல்பாடு ?
மேலும் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ஸ்டாலின் பதில் அளிக்கையில், " நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதில் ஊடகங்களுக்கு அக்கறை இருப்பது எங்களுக்கு தெரியும். கோர்ட்டில் வரும் உத்தரவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அதன் பின்னர் முடிவுகள் எடுக்கப்படும். தினகரனுடன் இணைந்து செயலாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments