எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: வாதம் நிறைவு

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அனைத்து தரப்பினரின் வாதம் நிறைவு பெற்றது. 

இந்த வழக்கில், எழுத்துப்பூர்வ வாதங்களை ஜனவரி 22ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சபாநாயகர், சட்டசபை செயலர், கொறடா, முதல்வர், 18 எம்எல்ஏக்கள் தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கொறடா உத்தரவை மீறி ஓட்டுப்போட்ட ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஜன.,17 ல் விசாரணை நடைபெற உள்ளது.

Comments