ஆவணங்கள் தாக்கல்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், சிகிச்சையின் போது, அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி, அப்பல்லோ நிர்வாகம், சிகிச்சை தொடர்பான ஆவணங்களை இரண்டு சூட்கேஸ்களில் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தது.
புதிய மனு
சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன், மனு ஒன்றைதாக்கல் செய்தார். அதில் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போர் குறித்த பட்டியலை விசாரணை ஆணையம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
டாக்டர் ஆஜர்
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு இதய சிகிச்சை அளித்த டாக்டர் சுவாமிநாதன், விசாரணை கமிஷன் உத்தரவுப்படி, நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜராகி விளக்கமளித்தார்.
Comments