குடும்பத்துடன் போராட பஸ் ஊழியர் முடிவு

அரசு பஸ் ஊழியர், தொழிற்சங்கங்கள், சென்னை, உயர்நீதிமன்றம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை. குடும்பத்துடன் போராட்டத்தை தொடர்வது என 22 தொழிற்சங்கங்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. 22 சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு பஸ் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தை தொடர்வது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Comments