வரலாற்றிலேயே முதல்முறையாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சய் கோகாய், குரியன் ஜோசப், மதன் லோகூர் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை இன்று (ஜன.,12) சந்தித்தனர்.
விரும்பத்தகாத விஷயங்கள்
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்த பத்திரிகையாளர் சந்திப்பை கூட்ட வேண்டிய நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். சுப்ரீம் கோர்ட் நிர்வாகம் முறையாக நடக்கவில்லை. சில மாதங்களாக விரும்பத்தகாத சில விஷயங்கள் நடக்கிறன. பத்திரிகையாளர்களை சந்திப்பது நீதித்துறை வரலாற்றில் முதன்முறை.
முயற்சி தோல்வி
எங்கள் ஆன்மாவை விற்பதாக குற்றச்சாட்டுக்கு ஆளாக விரும்பவில்லை. சுப்ரீம் கோர்ட்டிற்கும், நாட்டிற்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் சில விஷயங்கள் முறைப்படி நடக்கவிவல்லை. இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் நாங்கள் முறையிட்டோம். ஆனால், எங்களது முயற்சி தோல்வியில் முடிந்தது. சில மாதங்களாக சுப்ரீம் கோர்ட்டில் சூழ்நிலை சரியில்லை. சில விஷயங்கள் நடந்துள்ளன.
நாடு முடிவு செய்யட்டும்
சில விஷயங்கள் முறைப்படி நடக்க வேண்டும் என வலியுறுத்தினோம். சில விஷயங்கள் முறைப்படி பின்பற்றப்படவில்லை. தலைமை நீதிபதியை குறிப்பிட்ட கோரிக்கைகளுடன் நாங்கள் சந்தித்தோம். ஆனால், நாங்கள் சொல்வது சரி என எங்களால் நிருபிக்க முடியவில்லை.
சுப்ரீம் கோர்ட்டை பாதுகாக்க முடியாவிட்டால், நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது. இதனால், கோர்ட் நலன் குறித்து, மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்வது குறித்து நாட்டு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஜனநாயகம் நிலைக்காது
நீதிபதிகள் யாரும் தங்களது ‛ரேங்கை‛ மீறி செயல்படவில்லை. தங்களது கடமையை செய்கின்றனர். நீதித்துறையில் குளறுபடி நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது. சுப்ரீம் கோர்ட்டை பாதுகாக்க நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன . வழக்குகளை ஒதுக்கீடு செய்வது குறித்த பிரச்னை தலைமை நீதிபதியிடம் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது என்றனர்.
நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறுகையில், நாட்டிற்கு பட்ட கடனை அடைக்க வேண்டும் என்ற நோக்கம் தான் இங்கு எங்களை கொண்டு வந்தது. நாட்டிற்கு பட்ட கடனை அடைத்துவிட்டோம். இதற்குமேல் வேறு பிரச்னை இல்லை எனக்கூறினார். இதுகுறித்து கடிதம் ஒன்றையும் வெளியிட்டனர்.
Comments