அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்குக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: 2.44 காரணி ஊதிய உயர்வை அரசு அமல்படுத்தட்டும். பஸ்களை இன்றே இயக்குங்கள்.பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை ஏன் முடிவுக்கு கொண்டு வரக்கூடாது. கோரிக்கை எதுவாக இருந்தாலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பஸ்களை உடனே இயக்க வேண்டும் என்பதே கோர்ட்டின் நோக்கம். பிரச்னையை பேசி தீர்த்து கொள்ளலாம். வழக்குகளை விரிவாக விசாரிக்கலாம்.
உடனே பஸ்களை இயக்கப்பட வேண்டும் என்பதே கோர்ட்டின் யோசனை. கோரிக்கைகளை இறுதிஉத்தரவில் பார்த்து கொள்ளலாம். மக்களின் நலனை கருத்தில் கொள்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து ஐகோர்ட்டின் யோசனை குறித்து நிர்வாகிகளிடம் கேட்டு இரவு 7 மணிக்குள் தெரிவிப்பதாக தொழிற்சங்கங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
Comments