ஆலோசனை
காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சுப்ரீம் கோர்ட் செயல்பாடு குறித்து 4 நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, நீதிபதிகள் பேட்டி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் கூறியதாவது: கோர்ட்டில் நடப்பதை பொது வெளியில் கொண்டு வர வேண்டிய சூழ்நிலைக்கு நீதிபதிகள் தள்ளப்பட்டனர்.
இது இந்திய வரலாற்றில் கறுப்பு நாள். நீதிபதிகள் எழுப்பிய பிரச்னை குறித்து தேசம் விவாதிக்க வேண்டிய நேரம் இது. தலைமை நீதிபதியும், சம்பந்தப்பட்ட நீதிபதியும் இது குறித்து ஆலோசனை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் பெருமைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டால் என்ன இருக்கும். ஜனநாயகத்தின் தூணாக கோர்ட் இருக்க வேண்டும். அது எவ்வாறு இயங்கிறது என்பதை கவனிக்க வேண்டியது சட்ட அமைச்சரின் பொறுப்பு.
மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறுகையில், நான்கு நீதிபதிகளின் கருத்து எங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது: சுப்ரீம் கோர்ட்டின் தனித்தன்மை மற்றும் நேர்மை ஆகியவை எப்படி பாதிக்கப்பட்டது என்பது குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் மூன்று தூண்களில் எந்த பிரச்னை எழுந்தாலும் அவை சரி செய்யப்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் டி.ராஜா கூறியதாவது: நீதிபதி செல்லமேஸ்வரரை நீண்ட நாட்களாக தெரியும். அவரும் மற்ற நீதிபதிகளும் மிகப்பெரிய நடவடிக்கை எடுத்த போது, அவரை சந்திக்க வேண்டும் என நினைத்தேன். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். நாடு மற்றும் ஜனநாயக நலன் குறித்து அனைவருக்கும் கவலை உள்ளது.
முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கங்குலி கூறுகையில், பிரச்னை குறித்து கேள்விப்பப்பட்டதும் கவலையடைந்தேன். இது நடந்திருக்கக்கூடாது. ஆனால், நீதிபதிகளுக்கு வலிமையான காரணங்கள் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Comments