மத்தியஸ்தர் நியமனம்
சம்பளம் ,ஓய்வூதிய நிலுவை தொடர்பாக கடந்த ஒரு வாரமாக அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோர்ட் பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்தும் போராட்டம் முடிவுக்கு வந்தபாடில்லை. இதனையடுத்து அரசுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையில் பேச்சு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி இ.பத்மநாபன் என்பவரை நியமித்துள்ளது.
இவர், ஊதிய உயர்வு காரணி 2.44 மடங்கா அல்லது 2.57 மடங்கா என்பது குறித்து பேச்சு நடத்தி முடிவு செய்வார். அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Comments