சென்னை: சட்டசபையில் எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார் இந்த வருடத்தில் நடக்கும் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முதல் நாள் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவையை தொடங்கி வைத்து பேசினார். இந்த நிலையில் இன்று மூன்றாவது நாள் கூட்டம் நடைபெறுகிறது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று காலையில் நடந்தது. அதன்பின் சட்டசபை உறுப்பினர்களின் ஊதிய உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இந்த மசோதாவின் மூலம் எம்.எல்.ஏக்கள் ஊதியம் 55 ஆயிரத்தில் இருந்து 1.05லட்சமாக உயரும் என்று கூறப்படுகிறது. இதன் மீதான விவாதம் இனி நடக்கும். மேலும் கடந்த சில மாதங்களாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நிறைய ஊதியம் நிலுவையில் உள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் 3 லட்சம் வரை நிலுவைத்தொகை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Comments