தமிழக சட்டசபை கூடியது

சென்னை: நடப்பு ஆண்டில் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. சட்டசபைக்கு வந்த கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சபாநாயகர், தனபால் வரவேற்றார். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த பன்வாரிலால் புரோஹித், ஆங்கிலத்தில் உரையாற்றி வருகிறார். முதலில் கவர்னர்,' வணக்கம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்' என்று தமிழில் கூறினார். கவர்னரின் தமிழ் உரையை, சபாநாயகர் தனபால், அவையில் வாசித்தார்

முதல் நாள் கூட்டம் முடிந்த பின், மதிய நேரத்தில், சபாநாயகர் தலைமையில், அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடக்கும். அதில், எத்தனை நாள் கூட்டத் தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

தினகரன் வருகை; சல,சலப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன் இன்று அவைக்கு வந்தார். அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்களும் வந்தனர். ஆனால் அவர்களுக்கு சபைக்குள் செல்ல அனுமதி இல்லை என காவலர்கள் கூறினர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தினகரனுக்கு சில தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வாழ்த்து தெரிவித்தனர். கவர்னர் உரையை துவக்கிய போது, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Comments