
சட்டசபையில் விதி எண் 110ன்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து கழக நிதி நிலையை சரி செய்ய யுக்திகளை கடைபிடிப்பதோடு, டீசல் விலை ஏற்றத்திற்கான தொகையை அரசு மானியமாக வழங்கியது. பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்து கட்டணத்தை குறைந்த அளவிலேயே வைத்துள்ளது. போக்குவரத்து துறை நஷ்டத்தை போக்க ரூ.5138.5 கோடி அளவுக்கு ஜெ. அரசு நிதி ஒதுக்கியது.
போக்குவரத்து கழகத்தில் 30.12.2017 வரையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே இந்த தொகை அவர்களுக்கு வழங்கப்படும். இப்போது அரசால் வழங்கப்படும் இத்தொகையுடன் சேர்த்து போக்குவரத்து கழக ஓய்வூதிய பலன்களாக 2143 கோடி அளவுக்கு வழங்கியுள்ளது.
எனவே போக்குவரத்து கழக ஊழியர்கள் கோரிக்கை பலவற்றை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதால், பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிஐடியூ அமைப்பின் சவுந்திரராஜன் இதுகுறித்து கூறுகையில், முதல்வர் அறிவிப்பில் எதுவும் விஷேசம் இல்லை. எங்களிடமிருந்து ஆண்டுக்கணக்கில் கையாடல் செய்து வைத்த பணத்தைதான் அரசு திரும்ப வழங்குகிறது. இது ஊழியர்கள் பணம்தான். ஏதோ அவர்கள் பணத்தை தூக்கி தருவதை போல மக்களிடம் காட்டிக்கொள்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments