2017ல் இந்திய ராணுவத்தின் அதிரடியில் 138 பாக்., வீரர்கள் பலி

இந்திய ராணும், பாகிஸ்தான் வீரர்கள், அதிரடி, தாக்குதல்புதுடில்லி: கடந்த ஆண்டு அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் அளித்த பதிலடியில், அந்நாட்டு ராணுவ வீரர்கள் 138 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 28 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாகவும், இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய வீரர்கள் காயம்

இது தொடர்பாக, அந்த வட்டாரங்கள் கூறியதாவது: எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அத்துமீறயதற்கு இந்திய ராணுவம் அளித்த பதிலடியில் பாகிஸ்தானுக்கு 135 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 155 பேர் காயமடைந்துள்ளனர். 28 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 70 பேர் காயமடைந்தனர். 

மறுப்பது வழக்கம்

பாகிஸ்தான் எப்போதும் தனது வீரர்கள் உயிரிழந்ததை ஒப்பு கொல்லாது. உயிரிழந்தவர்களை பொது மக்கள் எனவே கூறும். கார்கில் போரின் போதும், இந்தியா ஆதாரத்துடன் அந்நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை நிருபித்த போதும், இதனை ஏற்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. கடந்த ஆண்டு டிச.,25 ல் பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் காஷ்மீருக்குள் ஊடுருவினர். 3 பேரை இந்திய ராணுவம் சுட்டு கொன்றது. இதனை முதலில் டுவிட்டரில் உறுதி செய்த பாகிஸ்தான், பின்னர் அதனை மறுத்தது. இந்திய ராணுவம் அத்துமீறி தாக்கியதில் 3 வீரர்கள் உயிரிழந்ததாக குற்றம்சாட்டியது. இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments