16,319 பஸ் ஊழியர்களுக்கு நோட்டீஸ்

அரசு பஸ் ஊழியர்கள், நோட்டீஸ், உயர்நீதிமன்றம், போக்குவரத்து துறை
சென்னை: வேலைக்கு வராத அரசு பஸ் ஊழியர்கள் 16,319 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அரசு பஸ் ஊழியர்கள் பிரச்னை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, போராட்டத்திற்கு விதித்து இருந்த தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. ஊழியர்கள் அனைவரும் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அத்துடன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பிறகே, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து கோவை மண்டலத்தில், 11,819 பஸ் ஊழியர்கள்; மதுரை மண்டலத்தில், 4,500 பஸ் ஊழியர்கள் என மொத்தம், 16,319 பேருக்கு விளக்கம் கேட்டு போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Comments