**Exclusive** ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கருத்து கணிப்பு முடிவு : திமுக அமோக வெற்றி பெரும், அதிமுக இரண்டாவது இடம்

ஆர்.கே.நகர் : தமிழகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21-ல் நடக்கிறது.  பொதுவாக இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தல்களை விட மிக, மிக முக்கியத்துவம் பெறுகிறது இந்த தேர்தல்.  ஏன் என்றால், இந்த இடைத்தேர்தலின் வெற்றி, தோல்வி நிச்சயம் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்ப்படுத்தும் என்பதால் தான்.

ஜெ. இறப்பிற்கு பின், அதிமுக பல அணிகளாக பிரிந்து, இரட்டை இலை முடக்கப்பட்டு, பிறகு முக்கிய அணிகள் இணைத்து இரட்டை இலை மீட்கப்பட்ட நிலையில், ஒருங்கினைன்த்த அதிமுகவிற்கு ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். தலைவர்களாக சந்திக்க போகும் முதல் தேர்தல் இது.  இது இவர்களின் செல்வாக்கை நிருப்பிக்க போகும் தேர்தலும் கூட.

ஜெ. இறந்த பிறகு பலகீனமான அதிமுகவை எதிர்த்து மாபெரும் வெற்றியை பெறவேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக இருக்கிறது. மேலும், இந்த வெற்றியின் அடிப்படையில் தமிழக அரசியலில் அதிமுகவின் ஆட்சிக்கு முடிவுரை எழுத முடியும் என்ற நிலையில் வெற்றி பெற்றே தீரனும் என்ற கட்டாயம் திமுகவிற்கு இருக்கிறது. மற்ற கட்சிகளை பொறுத்தவரை இது வெறும் தேர்தல் என்ற நிலையே.

சுயட்சையாக போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு, வெற்றி பெற வேண்டும் எண்ணத்தை விட, தன்னை எதிர்த்து நிற்கும் அதிமுகவை விட ஒரு ஓட்டாவது அதிகம் பெற்றுவிட வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருக்கிறது.

இத்தகைய சூழலில் நம் தமிழ் நியூஸ் ஆன்லைன் நிறுவனம் சுமார் 30 பேர் கொண்ட குழுவாக தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து தரப்பு வாக்காளர்கள் சுமார் 2500 பேரிடம் கருத்து கணிப்பை நடத்தி இருக்கிறது. அதன் முடிவு பின்வருமாறு :


1. ஆர்.கே.நகரில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு : திமுகவிற்கு என்று 44% பேரும், அதிமுகவிற்கு என 39% பேரும், நாம் தமிழருக்கு 9% பேரும், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் டி.டி.வி.க்கு 5% பேரும் தங்களின் ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள்.  மாநிலத்தில் அதிமுக, திமுகவிற்கு மாற்று என்று தங்களை மார்தட்டி சொல்லும் பா.ஜ.க. நோட்டோவை விட குறைவாகவே வாக்குகளை பெரும். நோட்டோ 2% மற்றும் பா.ஜ.க. 1%. 

2. எடப்பாடியின் ஆட்சி நீடிக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு : வேண்டாம் என்று 86% பேரும், வேண்டும் என்று 14% பேரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

3. அடுத்த முதல்வராக யாருக்கு அதிக தகுதி இருக்கிறது? என்ற கேள்விக்கு : ஸ்டாலின் அவர்கள் தான் என 57% பேரும், ஓ.பி.எஸ். (16%) அல்லது இ.பி.எஸ்.(12%) தான் என 28% பேரும், சீமான், விஜயகாந்த், அன்புமணி அவர்களுக்கு முறையே 7%, 5%, 3% பேரும் தங்களின் ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள்.

4. மாநில சுயாட்சியில் பா.ஜ.க.வின் தலையீடு சரியா? என்ற கேள்விக்கு : தவறு என்று 92% பேரும், சரி என 8% பேரும் தங்களின் கருத்தை பதிவு செய்து இருக்கிறார்கள்.

5. எதிர்கட்சி தலைவராக ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு...? என்ற கேள்விக்கு : சிறப்பாக இருக்கிறது என 51% பேரும், இன்னும் அதிகம் செயல்பட வேண்டும் என 22% பேரும், சொல்லும்படி இல்லை என 27% பேரும் தங்களின் கருத்தை பதிவு செய்து இருக்கிறார்கள்.

அதிகபடியான பண விநியோகம், அதிகார பலம் என அனைத்தையும் ஒட்டுமொத்தமாக உற்று நோக்கும் ஆர்.கே.நகரில் கடும் போட்டி என்பதை விட பணத்தின் கடைசி நேர ஆதிக்கம் இந்த முடிவை சற்றே மாற்றும் என்பதில் ஐயம் இல்லை. இருந்தாலும், மொத்தத்தில் தற்பொழுதைய நிலவரப்படி திமுக அமோக வெற்றியை ஆர்.கே.நகரில் பெரும். இது ஆளும் அதிமுக அரசிற்கு மேலும் நெருக்கடியை ஏற்ப்படுத்தும்.

ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இடையே இந்த தேர்தலின் முடிவு நேரடி அதிகார போட்டியை ஏற்ப்படுத்தும்.  மத்தியில் இருக்கும் மோடி அரசின் மறைமுக ஆதரவில் பெரும் பாதிப்பை ஆளும் அதிமுக அரசு பெரும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

மொத்தத்தில் இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சி தான் வெற்றி பெரும் என்ற தோற்றத்தை திமுக நிச்சயம் இந்த தேர்தலில் முறியடிக்கும்.

Comments