தேர்தலை முறையாக நடத்தினால் திமுக வெற்றி பெறும் : ஸ்டாலின்

ஸ்டாலின், Stalin,திமுக, DMK,ஆர்.கே.நகர் தேர்தல், RK Nagar Election, கவர்னர் பன்வாரிலால்,Governor Banwarilal,மீனவர்கள்,  Fishermen,முதல்வர் பழனிசாமி , Chief Minister Palani,எப்ஐஆர்.,Fir,தமிழக அரசு,Tamilnadu Government,   நிர்மலா சீத்தாராமன்,Nirmala Seetharaman,சென்னை : சென்னை கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி அளவிற்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக கூறித் தான் கடந்த முறை தேர்தலை நிறுத்தி வைத்தனர். ஆனால் அதற்கு அமைச்சர்கள் உள்ளிட்ட யார் மீது நடவடிக்கையோ, எப்ஐஆர்.,ஓ பதிவு செய்யப்படாத நிலையில், தற்போது மீண்டும் தேர்தல் நடக்க உள்ளது. இந்த முறை தேர்தல் முறையாக நடைபெறும் என நம்புகிறோம். அப்படி முறையாக தேர்தல் நடத்தப்பட்டால் திமுக நிச்சயமாக அமோக வெற்றி பெறும். மீண்டும் தேர்தலை நிறுத்த சதி நடப்பதாக கூறப்படுவது உண்மை தான்.

கோவையை தொடர்ந்து நெல்லையிலும் கவர்னர் பன்வாரிலால் நேரடியாக ஆய்வு நடத்தி வருகிறார். அடுத்து கன்னியாகுமரிக்கும் அவர் செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை நடப்பது குதிரை பேர, அடிமை ஆட்சி என்பதால் தானே நேரடியாக களங்க இறங்க கவர்னர் நினைத்திருக்கலாம். ஆய்வு நடத்த கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. தமிழக அரசு இது குறித்து கவலைப்படவில்லை. ஆட்சி முறையாக நடக்க வேண்டும் என்று விரும்பினால், உடனடியாக சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க இந்த மைனாரிட்டி அரசிற்கு உத்தரவிட வேண்டும்.

காணாமல் போன மீனவர்கள் பற்றி முறையாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மாயமான மீனவர்கள் பற்றிய முதல்வர் ஒரு தகவலையும், அமைச்சர் மற்றொரு தகவலையும், நிர்மலா சீத்தாராமன் மற்றொரு தகவலையும் கூறி வருகின்றனர். மாயமான மீனவர்களை மீட்க மத்திய- மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments