இதற்கு பாக்., வெளியுறவுத்துறை செயலர் முகம்மது பைசல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், காங்., மூத்த தலைவர்கள் பாக்., அதிகாரிகளை ரகசியமாக சந்தித்து 3 மணிநேரம் பேசியதாக மோடி கூறி உள்ளது ஆதாரமற்ற, பொறுப்பற்ற பேச்சு. உங்களின் நாட்டுக்குள் நடக்கும் தேர்தல் சண்டைக்கு எங்களை இழுக்காதீர்கள்.
அனைத்திற்கும் பாக்.,கை இழுத்து பேசுவதை இந்தியா நிறுத்த வேண்டும். பாக்., மீது பழி போடுவதை விடுத்து, உங்களின் தனிப்பட்ட பலத்தை காட்டி தேர்தலில் வெற்றி பெறுங்கள். மணிசங்கர் அய்யர் இல்லத்தில் நடந்த ரகசிய ஆலோசனையில் பாக்., தூதர், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கலந்து கொண்டார்கள் என மோடி ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என தெரிவித்துள்ளார்.
Comments