ஆர்கே நகரில் பொது மக்கள் சாலை மறியல்

சென்னை: சென்னை தண்டையார்ப்பேட்டையில் பண விநியோகம் செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பண விநியோகத்தில் ஈடுபடாத நபரை கைது செய்ததாக கூறி, போலீஸ் ஸ்டேசன் அருகே பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி திமுக, தினகரன் அணியினரும் சாலை மறியல் செய்த மக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Comments