
வடக்கே வாய்ப்பு அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்: வடக்கு குஜராத்திலுள்ள 53 தொகுதிகளில், பாஜகவுக்கு 45 சதவீதம் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த 2012 சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு இங்கு் 50 சதவீத வாக்குகள் கிடைத்தன.
காங்கிரஸ் வாக்கு சதவீதம் ஏற்றம் கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு இப்பிராந்தியத்தில் 40 சதவீத வாக்கு சதவீதம் இருந்த நிலையில் அது தற்போது 42 சதவீதமாக சிறு ஏற்றம் கண்டுள்ளது. பிறர் 13 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாம்.
மொத்த சீட்டுகள் சீட்டுகளை பொறுத்தளவில் வடக்கு குஜராத்தில் பாஜக 30-34 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது. காங்கிரசுக்கு 18-22 தொகுதிகள் கிடைக்கலாம். பிறர் 2 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் பாஜக இங்கு 32 தொகுதிகளையும், காங்கிரஸ் 21 தொகுதிகளையும் வென்றிருந்தது.
தெற்கிலும் பாஜக ஆதிக்கம் அதேபோல தெற்கு குஜராத்தில் பாஜக 23 முதல் 27 தொகுதிகளையும், காங்கிரஸ் 6-10 தொகுதிகளையும், பிறர் 1-3 தொகுதிகளையும் வெல்ல வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் பாஜக இங்கு 28 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரசுக்கு 6 தொகுதிகள் கிடைத்தன.
வாக்கு வங்கி பாஜகவுக்கு தெற்கு குஜராத்தில் இம்முறை 46 சதவீதம் வாக்குகள் கிடைக்கலாம். கடந்த தேர்தலில் அங்கு 52 சதவீத வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸ் கடந்த முறை 37 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில், இம்முறை 39 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புல்ளது. பிறர் 15 சதவீத வாக்குகளை வைத்துள்ளனராம்.
சவுராஷ்டிரா நிலைமை சவுராஸ்டிராவில் பாஜகவுக்கு 27-31 தொகுதிகளும், காங்கிரசுக்கு 23-27 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாம். கட்ச் மண்டத்தில், பாஜகவுக்கு 27 முதல் 31 தொகுதிகளும், காங்கிரசுக்கு 23-27 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
Comments