இனி டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது

டிஜிட்டல் பணபரிவரத்தனை, Digital Cash transaction, மத்திய அமைச்சரவை, Union Cabinet,  மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், Union Minister Ravi Shankar Prasad,முஸ்லீம் பெண்கள், Muslim women,  முத்தலாக் , Muthalak, ஜிஎஸ்டி,GST,  பார்லிமென்ட் ,Parliament,புதுடில்லி : மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர், முஸ்லீம் பெண்களுக்கு சட்டரீதியாக பாதுகாப்பு அளிக்க முத்தலாக் விவகாரம் குறித்து நடப்பு பார்லி., கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டு, சட்டம் இயற்றப்பட உள்ளது. ஜனவரி 1 தேதி முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு டிஜிட்டல் பணபரித்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. 
நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ரூ.2.18 லட்சம் கோடி அளவிற்கு டிஜிட்டல் பணபரிவர்த்தனை நடந்துள்ளது. ஜிஎஸ்டி., டிஜிட்டல் பணபரிவர்த்தனையை மேலும் பலப்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments