கன்னியாகுமரி: ஒக்கி புயல் இழப்பீடு அறிவிக்கக்கோரி குமரி மாவட்ட கலெக்டர் அறையில் தி.மு.க., மற்றும் காங்., கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு மற்றும் பாதிப்புக்குள்ளான விவசாயிகளின் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் அறையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சுரேஷ் ராஜன், மனோ தங்கராஜ், ஆஸ்டின் மற்றும் காங்., எம்.எல்.ஏ.,க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ் என மொத்தம் 5 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments