தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஷால் புகார் மனு

தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஷால் புகார் மனுசென்னை: தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், தனது மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விஷால் புகார் மனு அளித்தார். மேலும் வேட்புமனு நிராகரிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் முறையிட்டார்.

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை, தேர்தல் அதிகாரிகள், நேற்று தள்ளுபடி செய்தனர். இதனையடுத்து இன்று(டிச.,6) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்த விஷால், தனது மனு நிராகரிக்கப்பட்டது குறித்து அவரிடம் விளக்கமளித்து புகார் மனுவையும் அளித்தார்.

Comments