மேல்முறையீடு
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு, தமிழக அரசு அனுமதி மறுத்தது குறித்த வழக்கில், 'தமிழக சுற்றுச்சூழல், ஆறுகள், விவசாயிகள் நலன் கருதிஅனைத்து மணல் குவாரிகளிலும் உடனடியாக மணல் அள்ளுவதை நிறுத்தி, ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும். புதிதாக மணல் குவாரிகளை துவக்கக் கூடாது' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவு உத்தரவிட்டார்.இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஒத்திவைப்பு
மனுவை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு விசாரித்தது. தமிழக அரசின் வாதங்களை கேட்ட நீதிமன்றம், தனி நீதிபதிக்கு உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்தது. தொடர்ந்து எதிர்தரப்பும் தனது வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்கி, விசாரணையை டிச.,8 க்கு ஒத்திவைத்தனர்.
Comments