சென்னையில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து 89 கோடி ரூபாய் மீட்கப்பட்டது.
தற்போதைய இடைத் தேர்தலில் அது போன்று முறைகேடுகள் நடக்க கூடாது என தேர்தல் கமிஷனிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில் ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., பேசுகையில், 'இரண்டு தரப்பினரும் ஒன்று சேர வேண்டும் என முன்பு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது' என, தெரிவித்து இருந்தனர். எனவே, அரசுக்கு சார்பாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
மீனவர் பிரச்னையில் ஒவ்வொருவரும் ஒரு கணக்கு சொல்கின்றனர். நாளை குமரியில் தி.மு.க., மீனவர் அணி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடக்க உள்ளது. அந்த போராட்டத்தில் நானும் பங்கேற்கிறேன். கவர்னரை நாளை மறுநாள் சந்திக்க உள்ளேன். ஆர்.கே.நகரில் அ.தி.மு.க., டிபாசிட் கூட வாங்காது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
Comments