வேட்பு மனு தள்ளுபடி.. வழக்கமான அரசியல்வாதிகள் போல சாலை மறியல் செய்த விஷால்!

Actor Vishal protesting front of RK Nagar election commission office
சென்னை: தனது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்ததைக் கண்டித்து ஆர்கே நகர் தேர்தல் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து நடிகர் விஷால் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார். இதையடுத்து அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். நடிகர் விஷால் வேட்புமனுவை ஏற்பதில் தொடக்கம் முதலே நீடித்தது. விஷாலின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என அதிமுக, திமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விஷால் மனுவில் கணக்கு, உறுதிமொழி சரியாக இல்லை என புகார் எழுந்தது. இதையடுத்து விஷாலின் வேட்புமனு பரிசீலனை செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுவில் கையெழுத்து போட்டவர்கள் பின்வாங்கியதால் மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து விஷால் ஆர்கே நகர் தேர்தல் அலுவலகம் முன்பு ஆதரவாளர்களுடன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து விஷாலை அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர்.

Comments