சென்னையில் அவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சியின் அத்துமீறல்கள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சி சொல்வதை தான் தேர்தல் நடத்தும் அலுவலர் செய்வார் என்பது தெரிய வந்துள்ளது. ஆர்.கே.நகரில் இன்னும் 5,000 போலி வாக்காளர்களை நீக்கவில்லை. குதிரை பேர ஆட்சியை நீக்க வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
Comments