அதிமுக ஒரு சாய்ந்த கோபுரம்.. விரைவில் சரியும்.. பொன்னார் பொளேர்!

Pon.Radhakrishnan says that ADMK is a leaning tower
சென்னை: அதிமுக ஒரு சாய்ந்த கோபுரம் என்றும் அக்கட்சி எப்போது வேண்டுமானாலும் சாயலாம் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தினகரன் அணி ஆகியன போட்டியிடுகின்றன.
பாஜக சார்பில் போட்டியிடும் கரு.நாகராஜனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில் ஆர்.கே.நகரில் தேர்தல் கண்டிப்பாக நடைபெற வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம் ஆகும். தேர்தல் என்றாலே லாரி லாரியாக பணம் போன காட்சி மாறி இப்போது குக்கர் போய் கொண்டிருக்கிறது. அதிமுக சாய்ந்த கோபுரம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் சாயலாம் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பாஜகவின் வாக்கு வங்கி இல்லாமலேயே அதிமுக ஜெயிக்கும் என்று கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிமுக நிர்வாகிகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments