தனியார் நிறுவனம் ஒன்று ஆன்லைனில் உலகளவில் யுனெஸ்கோ கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரிய இடங்கள் குறித்த கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில் இந்தியாவை சேர்ந்த தாஜ்மஹால் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர்வாட் கோவில் பிடித்துள்ளது. மேலும் இந்த பட்டியிலில் சீன பெருஞ்சுவர், பிரேசிலில் உள்ள இஹாஷு தேசிய பூங்கா, உள்ளிட்ட பல இடங்கள் இடம் பெற்றுள்ளது.
மேலும் இந்திய அரசின் புள்ளி விபரப்படி இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் நான்கில் ஒருவர் தாஜ்மஹாலை பார்வையிடுவதாகவும், அதேநேரத்தில் மற்ற உலக அதிசய தளங்களை ஒப்பிடும் போது தாஜ்மஹாலுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தாஜ்மஹாலுக்கு ஆண்டிற்கு சராசரியாக 80 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Comments