
திருந்தாத தஷ்வந்த் தஷ்வந்த் தன்னுடைய தாயாரிடம் பணம் கேட்டு நச்சரித்து வந்ததாக தெரிகிறது. கடந்த சனிக்கிழமை வீட்டில் தஷ்வந்தும் அவருடைய தாய் சரளாவும் மட்டும் இருந்துள்ளனர். மாலையில் தஷ்வந்த் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார், அவரது தந்தை வீடு திரும்பி பார்த்த போது சரளா தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
நகைக்காக கொலை இதுகுறித்து தஷ்வந்த்தின் தந்தை போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணயில் சரளாவின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட காயம் உள்ளது. வீட்டிலிருந்த நகை, பணம் காணவில்லை. தஷ்வந்தும் தலைமறைவாகியுள்ளார். இதனால், தஷ்வந்த்தே சரளாவை கொலை செய்திருக்க அதிக வாய்ப்பிருப்பதாக போலீஸ் தரப்பு சந்தேகித்தனர்.
சென்னை அழைத்து வரப்படுகிறார் குற்றவாளி தஷ்வந்தை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக தஷ்வந்த தேடப்பட்டு வந்த நிலையில் மும்பையில் வைத்து போலீசார் அவரை கைது செய்துள்ளார். அங்குள்ள மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்திய பின்னர் அவர் சென்னை அழைத்து வரப்படுகிறார்.
கடுமையான தண்டனை கிடைக்குமா? சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குண்டர் சட்டம் ரத்தான போதே தஷ்வந்தால் பலருக்கும் ஆபத்து இருக்கிறது என்று ஹாசினியின் தந்தை எச்சரித்திருந்தார். அப்போது மகனுக்கு ஆதரவாக பேசினார் தஷ்வந்தின் தந்தை, இப்போது அவர்கள் குடும்பத்தையே தஷ்வந்தின் செயல் பாதித்துள்ளது. இந்த முறையாவது சட்டம் தஷ்வந்திற்கு கடுமையான தண்டனை வழங்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments