
அதில் கிடைத்த முடிவுகள் சுவாரஸ்யமானவை. இந்த கேள்விக்கு இதுவரை மொத்தம் பதிவான வாக்குகள் 30 ஆயிரத்து 226 ஆகும். அதில் பெரும்பாலானவர்களின் வாக்கு யாருக்கு கிடைத்தது, மோசமான வாக்குகளைப் பெற்றது யார் என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
பாஜகவுக்குக் கிடைத்த வாக்குகள் பாஜகவின் தாமரை சின்னத்துக்கு கிடைத்த வாக்குகள் வெறும் 2.2 சதவீதமாகும். மொத்த வாக்குகளில் 682 வாக்குகளே தாமரைக்குக் கிடைத்துள்ளது. பரிதாபமான நிலைதான். 5வது இடமே கிடைத்துள்ளது.
அதிமுகவுக்குக் கிடைத்த வாக்குகள் இரட்டை இலை சின்னத்துக்குக் கிடைத்த வாக்குகள் 12.33 சதவீதமாகும். அதாவது 3727 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது நாம் தமிழரை விட இது குறைவாகும். 4வது இடத்தைப் பிடித்துள்ளது அதிமுக.
நாம் தமிழருக்குக் கிடைத்த வாக்குகள் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்துக்கு அதாவது நாம் தமிழர் கட்சியின் சின்னத்துக்குக் கிடைத்த வாக்குகள் 15.45 சதவீதமாகும். அதாவது பதிவான வாக்குகளில் 4671 வாக்குகள் இக்கட்சிக்குக் கிடைத்தது. இக்கட்சி 3வது இடத்தைப் பிடிக்கிறது.
தினகரனுக்குக் கிடைத்த வாக்குகள் புதிய சின்னமான குக்கருக்கு அதாவது தினகரனின் கட்சிக்குக் கிடைத்துள்ள வாக்குகள் 17.32 சதவீதமாகும். மொத்த வாக்குகளில் இவருக்குக் கிடைத்த வாக்குகள் 4704 ஆகும். இவருக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.
திமுகவுக்குக் கிடைத்த வாக்குகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்துக்கு கிடைத்த வாக்குகள் 45.87 சதவீதமாகும்.அதாவது 13,865 வாக்குகள் இக்கட்சிக்குக் கிடைத்துள்ளன. இதுதான் பதிவான வாக்குகளியே அதிகம். அதாவது திமுக முதலிடத்தைப் பிடிக்கிறது.
மற்றவர்கள் வெல்ல ஆதரவு இவர்களைத் தவிர வேறு யாராவது வெல்வார்கள் என்று கூறியோரின் வாக்குகள் 6.08 சதவீதமாகும். அதாவது 1839 வாக்குகள் கிடைத்துள்ளன. இது பாஜகவுக்குக் கிடைத்ததை விட கூடுதலாகும்.
Comments