டைரியால் அம்பலம்.. சேகர் ரெட்டியிடம் பணம் பெற்ற அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: ஸ்டாலின்

MK Stalin asking ministers whom name are in the Seker Reddy dairy to be sacked சென்னை: டைம்ஸ் நவ் சேனல் வெளியிட்ட சேகர் ரெட்டி டைரியில் அமைச்சர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், அந்த அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று பட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். போயஸ் கார்டனுக்கு நெருக்கமான, தொழிலதிபர், சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் பக்கங்கள் எனக் கூறி டைம்ஸ் நவ் என்ற தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி சேனல் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், கூறியதாவது: சேகர் ரெட்டி டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை தேவை. டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விவகாரம் பற்ரி சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சேகர் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்களுக்கு உள்ள தொடர்பு தற்போது ஆதாரபூர்வமாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக ஆளுநர் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்குற்றச்சாட்டு பொய் என்றால் அமைச்சர்கள் டிவி சேனல் மீதுதான் வழக்கு தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.

Comments