தவறான தகவல் தரும் மோடி: சிங் ஆவேசம்

 பிரதமர் மோடி,Prime Minister Modi, பாகிஸ்தான்,Pakistan, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், former Prime Minister Manmohan Singh, குஜராத் தேர்தல் , Gujarat election, தேச பக்தி, patriotism, தேர்தல் பயம்,Election fear,புதுடில்லி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தவறான தகவலை பரப்புகிறார் என்றும், பாகிஸ்தான் பிரமுகர்களிடம் நடத்திய பேச்சை தவறாக சித்தரிப்பதாகவும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.சமீபத்திய குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பேசிய மோடி ; " பாகிஸ்தான் குஜராத்தேர்தலில் தலையிடுகிறது. இதில் காங்கிரசாரும் பங்கு கொண்டுள்ளனர். சமீபத்திய பாக்., நிர்வாகிகளுடன் காங்கிரசார் சந்தித்த போது இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது " என கூறியிருந்தார். 

தோல்வி பயத்தால் மோடி

மோடியின் இந்த பேச்சுக்கு மன்மோகன்சிங் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: 

பிரதமர் மோடி தான் அழைப்பு இல்லாமல் பாகிஸ்தான் சென்றார். காங்., நிர்வாகிகள் குறித்து தவறான தகவலை கொடுத்து, மோடி ஆதாயம் தேட முயற்சிக்கிறார். பாகிஸ்தான் பிரதிநிதிகளிடம் நாங்கள் குஜராத் தேர்தல் குறித்து பேசவில்லை. குஜராத் தேர்தல் தோல்வி பயத்தால் மோடி பாகிஸ்தானை கையிலெடுத்துள்ளார். 

தேச பக்தி விஷயத்தில் போதனை எங்களுக்கு அளிக்க தேவையில்லை. பிரதமர் அலுவலக மதிப்பை குறைக்கிறார். தவறான தகவல் அளிக்கும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments