கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் மாயமான 1150 க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டுத்தரக் கோரி 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் இரு பிரிவாக சென்று குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபட உள்ளனர். ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக சுமார் 5000 பேர் பேரணியாக சென்றுள்ளனர். இவர்களை சின்னத்துறை பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலில் தத்தளிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்டுத்தரக் கோரி மீனவ சங்கங்களைச் சேர்ந்த மக்கள் ஊர்வலமாக சென்றுள்ளனர். இதனால் பாதுகாப்பிற்காக 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குழித்துறை ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக சுமார் 8 கி.மீ., மீனவ மக்கள் பேரணியாக சென்றனர். தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
Comments