விபச்சாரம்- வீட்டிலேயே கொலை செய்த உடல்கள் புதைப்பு- மும்பையை அதிரவைக்கும் லேடி ஆட்டோ சங்கர்’

தெரியாமல் போய்விட்டது.. மும்பை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று 13 ஆண்டுகளாக செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தண்டிப்படா பகுதியை சேர்ந்தவர் சரிதா பார்தி. இவர் வீட்டுடன் சேர்த்து மளிகைக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்வதாக போய்சர் பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கிருந்த 4 பெண்களை மீட்டனர்.

திடுக்கிடும் தகவல்கள் இதுதொடர்பாக சரிதா பார்தி மற்றும் அவரது கள்ளக்காதலன் கமலேஷை போலீசார் கைது செய்தனர். சரிதாவிடன் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கண்டித்த கணவர் அதாவது கமலேஷ்டன் சரிதா நெருங்கிப் பழகுவதை கண்டுபிடித்த அவரது கணவர் சாஹ்தேவ் சரிதாவை கண்டித்துள்ளார். மேலும் அவரை தினமும் குடிபோதையில் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

2004ல் கொலை இதனால் ஆத்திரமடைந்த சரிதா கடந்த 2004ஆம் ஆண்டு சாஹ்தேவை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதில் சாஹ்தேவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செப்டிக்டேங்கில் மறைப்பு இதையடுத்து தனது கள்ளக்காதலனான கமலேஷை வீட்டிற்கு வரவழைத்துள்ளார் சரிதா. பின்னர் இரண்டு பேரும் சேர்ந்து சாஹ்தேவின் உடலை செப்டிக் டேங்கில் மறைத்து வைத்துள்ளனர்.

ஓடிபோய்விட்டார்.. பின்னர் அப்பகுதியில் டைல்ஸ் கற்களை ஒட்டியுள்ளனர். கணவர் குறித்து அக்கம்பக்கத்தினர் கேட்டபோது அவர் தன்னை விட்டு ஓடிவிட்டதாக கூறி நாடகமாடியுள்ளார் சரிதா.

தெரியாமல் போய்விட்டது.. இதனை அக்கம்பக்கத்தினரும் நம்பிவிட்டனர். கணவர் மாயமானது குறித்து புகார் அளிக்கப்படாததால் போலீஸ்க்கு இந்த விவகாரம் குறித்து அப்போது தெரியாமல் போய்விட்டது.

எலும்புக்கூடு கண்டெடுப்பு இந்நிலையில் தற்போது சரிதா அளித்துள்ள வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலீஸ் அவரது வீட்டு செப்டிக் டேங்கை ஆய்வு செய்தனர். அப்போது அதில் சாஹ்தேவ் எலும்புக்கூடாக இருந்தது தெரியவந்தது.

தடயவியல் சோதனை இதையடுத்து எலும்புக்கூட்டை கைப்பற்றிய போலீசார் அது சாஹ்தேவின் உடல்தானா என்று ஆய்வு செய்ய தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சரிதாவின் வீட்டில் மேலும் 2 உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடிப் பார்த்தனர்.

வாடிக்கையாளர்களை கவர.. ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை. சரிதா மற்றவர்களை கொலை செய்ததாக எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சரிதா தனது வீட்டிற்கு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க மாய மந்திரங்களிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து சரிதாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆட்டோ ஷங்கர் போல் சென்னை திருவான்மியூரில் விபச்சார தொழிலில் கொடிகட்டி பறந்துவந்த ஆட்டோ ஷங்கர், அரசியல்வாதிகளுக்கு சினிமா நடிகைகள் மற்றும் இளம்பெண்களை விருந்தாக்கி வந்தார். தனது தொழிலுக்கு இடையூறு விளைவிப்பவர்களை கொன்று எரிப்பது மற்றும் வீட்டின் தளத்தில் புதைப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.

பெண் ஆட்டோ ஷங்கர் இந்த சம்பவங்கள் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைத்தொடர்ந்து ஆட்டோ ஷங்கர் தூக்கிலிடப்பட்டார். அவரது வாழ்க்கையை தழுவிதான் 100வது நாள் படம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆட்டோ ஷங்கரை பிரதிபலிக்கும் வகையில் மும்பையில் பெண் ஒருவர் விபச்சாரம் மற்றும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இந்த கணவனை கொன்று புதைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments