நிறுத்தப்படுமா ஆர்.கே.நகர் தேர்தல்?: தயாராகிறது தேர்தல் கமிஷன்

ஆர்.கே நகர் தேர்தல்,RK Nagar Election, தேர்தல் ஆணையம், Election Commission,தினகரன், Dinakaran,  சுயேட்சை, தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், DMK candidate Marudu Ganesh, மதுசூதனன், Madhusudhanan, பிரசாரம், சென்னை:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன், சுயேட்சையாக நின்றாலும், பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார். வெற்றிக்காக தினகரன் கடுமையாக உழைக்கிறார். அவரது ஆதரவாளர்கள், வீடு வீடாக சென்று பணம் தருவதாகவும் கூறப்படுகிறது.அதே நேரம், தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷும் தொகுதியில் பம்பரமாக சுழல்கிறார். இதையெல்லாம் கடந்து ஆளும்கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றால், மக்களை வெயிட்டாக கவனிக்க வேண்டும் என்று, மதுசூதனனை, கட்சியினர் பலரும் உசுப்பி வருகின்றனர்.இதையடுத்து, தொகுதியில் ஆளும்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் முகாமிட்டு, தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். பண விளையாட்டுக்களும் தங்கு தடையின்றி நடக்கிறது.இதையெல்லாம், பா.ஜ., தரப்பு, தீவிரமாக படம் பிடித்து ஆவணமாக்கி உள்ளது. இது தொடர்பாக, படமாக்கப்படும் விஷயங்களையெல்லாம், மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் பா.ஜ., தீவிரமாகி உள்ளது. இருந்த போதும், ஆர்.கே.நகர் தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லுவைத் தொடர்ந்து, மீண்டும் தேர்தலை நிறுத்திவிடும் யோசனைக்கு தேர்தல் ஆணையம் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Comments