வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்க கடல்,Bengal Sea, காற்றழுத்த தாழ்வு மண்டலம்,Atmospheric inferior zone, சென்னை வானிலை ஆய்வு மையம், Chennai Meteorological Center, பாலசந்திரன், Balachandran, மீனவர்கள்,Fishermen, தமிழகம் ,Tamil Nadu, புதுச்சேரி, Puducherry,சென்னை: வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நகரும்

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இயக்குநர் பாலசந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நேற்று தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது மசூலிபட்டினத்திற்கு தென்கிழக்கே 1160 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது. வரும் டிச., 8 வரையிலான காலகட்டத்தில் இது வட மேற்கு திசையில் ஆந்திர கரையை நோக்கி நகரும்.

மீனவர்கள்

தமிழகம் மீனவர்கள் அடுத்து 3 நாட்களுக்கு (டிச.,6,7 8) தேதிகளில் வங்க கடலில் ஆழ்கடல் பகுதிகளுக்கும், வட தமிழகம் தெற்கு ஆந்திர கடல் ஒட்டிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நெல்லை ஆயக்குடியில் 7 செ.மீ., மழையும், ராஜபாளையம், தென்காசி,அறந்தாங்கியில் தலா 1 செ.மீ., மழையும் பதிவாகயுள்ளது.

லேசான மழை

அடுத்த 2 நாட்கள் 6, 7 தேதி தமிழகம் புதுவையில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில பகுதிகளில் ஒரிரு முறை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments