
பாஜகவின் தயவில் தான் அதிமுக ஆட்சி நடத்துகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரியாமல் சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு இதை விட்டால் வேறு வழியில்லை பாஜகவுக்கு வரும் வாக்குகளை மாற்ற நினைத்து அவர் இவ்வாறு கூறி வருகிறார்.
பாஜகவுடன் இணைந்தால் ஆனால் மக்களைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார்கள். பாஜக அதிமுகவுடன் இருந்தால் அதிமுக ஊழலே செய்யாது. ஏனெனில் ஊழல் இல்லாத ஒரே கட்சி என்றால் அது பாஜக மட்டும் தான்.
தமிழகத்திலும் வர வேண்டும் பாஜக எங்கு சென்றாலும் அங்கு ஊழலற்ற தன்மை இருக்கும். அந்த ஊழலற்ற தன்மை தமிழகத்திற்கும் வரவேண்டும் என்பதால் தான் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்.
30 ஆண்டாக வளர்ச்சியில்லை கடந்த 30 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியுமே காணாத ஆர்கே நகரில் பாஜக வளர்ச்சியை கொண்டு வருவதற்காகவே போட்டியிடுகிறது. எனவே மக்கள் தங்களுக்கு அங்கீகாரம் தருவார்கள் என்று நம்புவதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
Comments