நியூயார்க் மன்ஹாட்டன் பஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு? .. ஒருவர் கைது என தகவல்

நியூயார்க்: நியூ யார்க் மன்ஹாட்டன் பஸ் நிலையத்தில் குண்டு வெடித்ததாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.

நியூயார்க்கில் மன்ஹாட்டன் பஸ் நிலையத்தில் 42-ஆவது தெரு மற்றும் 8-ஆவது அவென்யூவில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் கூட்டமும் அலை மோதியது. இந்நிலையில் அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் சிதறி ஓடினர். பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் நியூயார்க் போலீஸார் தெரிவித்துள்ளார். இதுவரை யாரேனும் காயம் அடைந்தார்களா என்ற தகவல் கிடைக்கவில்லை.

Comments