இவ்வழக்கை, இன்று (டிச.,11) விசாரித்த சென்னை ஐகோர்ட், உயிருடன் இருப்பவர்களின் படங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து விட்டது. மேலும், கட்அவுட், பேனர் வைக்க அனுமதிக்கும் நடைமுறையை மறுஆய்வு செய்யும் நேரம் வந்து விட்டது. வருவாய் நோக்கத்திற்காக மட்டுமே பேனர், கட்அவுட்கள் வைக்க அனுமதிப்பதா என நீதிபதிகள் அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.
தொடர்ந்து, கேரளாவில் தேர்தல் நேரங்களில் மூங்கில் தட்டிகளில் மட்டுமே பேனர் வைக்கப்படுகிறது. பேனர், கட்அவுட் வைப்பதால் மக்கள் அவதிப்படுவதை ஏன் கருத்தில் கொள்ளவில்லை என நீதிபதிகள் கேட்டுள்ளனர். பின்னர் தலைமை நீதிபதி விசாரணைக்காக இவ்வழக்கு வரும் 18 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Comments