நிறைய பேர் தேர்வுக்கு விண்ணப்பித்ததால் டிஎன்பிஎஸ்சி இணையதளம் முடங்கியது

TNPSC website has stalled after user traffic
சென்னை: நிறைய பேர் ஒரே நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்க முயன்றதால் டிஎன்பிஎஸ்சி இணையதளம் முடங்கி இருக்கிறது. சில மணி நேரம் வேலை செய்யாமல் இருந்த இணையதளம் பின் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தற்போது பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணப்ப படிவங்கள் கிடைக்கிறது. இதனால் பலரும் அந்த இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரே நேரத்தில் இன்று மாலை நிறைய பேர் வெவ்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இதன் காரணமாக இணையதளம் வேலை செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து சில நிமிடத்தில் டிஎன்பிஎஸ்சி இணையதளம் வேலை செய்யாமல் போய் இருக்கிறது. பின் சில மணி நேரத்தில் இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது. இந்த நிலையில் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் குறித்த விவரத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Comments