ஆர்கே நகரில் 59 பேர் போட்டி; விஷால் மனு தள்ளுபடி உறுதியானது

ஆர்கே நகர் தேர்தல், RK Nagar Election,திமுக,DMK, அதிமுக,AIADMK,  வேட்பாளர்,Candidate,  மருதுகணேஷ், Marudhu ganesh, மதுசூதனன், Madhusudhanan,சுயேட்சை , தினகரன், Dinakaran, பா.ஜ, BJP, கரு.நாகராஜன், Karu Nagarajan, நடிகர் விஷால்,Actor Vishal, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா , Jayalalitha brother daughter Deepa, தேர்தல் ஆணையம், Election Commission,சென்னை: ஆர்கே நகர் தேர்தலில், இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டது. 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இதில், விஷால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஆர்கே நகர் தேர்தல், டிச.,21ல் தேர்தல் நடக்க உள்ளது. திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சை வேட்பாளராக தினகரன், பா.ஜ.,வின் கரு.நாகராஜன், நடிகர் விஷால், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட பலர் ஆகியோர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனையின் போது, தீபா, நடிகர் விஷால் உள்ளிட்ட 73 பேரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 72 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. அப்போது சுயேட்சை வேட்பாளர்கள் 13 பேர் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்று கொண்டனர். இதனையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 59 பேர் தேர்தல் களத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.




வேட்புமனு நிராகரிப்பு குறித்து தேர்தல் அதிகாரியிடம் விஷால் புகார் அளித்திருந்தார். தேர்தல் விதிப்படி, இன்று(டிச.,7) மதியத்திற்குள் ஆதாரத்துடன் தேர்தல் அலுவலரிடம் விளக்கமளித்தால், வேட்புமனு ஏற்று கொள்ள வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்து கையெழுத்திட்டதாக கூறப்படும் தீபன், சுமதி இருவரும் தேர்தல் அலுவலரிடம் நேரில் ஆஜராக விளக்கமளித்தனர். இறுதி வேட்பாளர் பட்டியலில் விஷாலின் பெயர் இடம்பெறவில்லை.

Comments