சென்னை: கவர்னரின் பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது.
மாமல்லபுரம் அருகே சின்ன கல்பாக்கம் பகுதியில் கவர்னர் பன்வாரிலாலின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சாலையை கடக்க முயன்ற போது, வாகனம் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காயமடைந்த மற்றொரு பெண் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
Comments