
புதுடில்லி: ஒக்கி புயலுக்கு தமிழகத்தில் 10 பேர் பலியாகியள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியான அறிக்கை:ஒக்கி புயலுக்கு தமிழகத்தில் 10 பேரும், கேரளாவில் 29 பேரும் பலியாகியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 74 மீனவர்களும், கேரளாவை சேர்ந்த 93 பேரும் மாயமாகியுள்ளனர். தமிழகத்தில் 4 மாவட்டங்களும், கேரளாவில் 8 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2,802 பேரும், கேரளாவில் 33 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments