இது தொடர்பாக, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜஸ்தானில் கொள்ளயைர்கள் சுட்டதில் உயிரிழந்த பெரியபாண்டியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்த காவலர்கள் முனிசேகர், எம்புரோஸ், சுதர்சன், குருமூர்த்தி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும். உயிரிழந்த பெரியபாண்டியின் 2 மகன்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும். காயமடைந்த காவலர்களின் மருத்துவ செலவையும் அரசே ஏற்கும்.
போலீசாரை தாக்கிய கொள்ளயைர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். நகை கொள்ளை, போலீசாரை தாக்கிய கொள்ளையர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Comments