சங்கரன்கோவில் : நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக பிரமுகரின் இல்லத் திருவிழாவில் கலந்து கொண்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார்.அப்போது அவர் பேசுகையில், அதிமுகவை போல் எடுத்த உடன் முதல்வராக முடியாது. திமுகவில் படிப்படியாகத்தான் வளர முடியும். தமிழகத்தில் இதற்கு முன் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைகளின் தற்போதைய நிலவரம் என்ன? தமிழகத்தில் பாஜ.,வால் கால் அல்ல, கையை கூட ஊன்ற முடியாது.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக பாடுபடும் ஒரே கட்சி திமுக தான். இது சுயமரியாதை கல்யாணம். அதனால் தான் நமக்கு தெரிந்த, நமக்கு புரிந்த நமது தாய்மொழியில் நடைபெறுகிறது என்றார்.
Comments