பொதுமக்கள் வரவேற்பு:
இது குறித்து, அ.தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தினகரன், தன்னை புனித ஆத்மாவாக காட்டிக் கொள்ள, மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் குற்றம்சாட்டி கருத்துச் சொன்னாலும், அதை மக்கள் நம்பத் தயாரில்லை. மோடி, பழிவாங்குவதற்காகவே அல்லது தினகரன் - சசிகலா தரப்பை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தோடு வருமான வரித் துறையினரை ஏவிவிட்டதாகவே வைத்துக் கொண்டாலும், ரெய்டு மூலம் கைப்பற்றப்பட்டிருக்கும் ஆவணங்கள், நகைகள், பணத்தை எல்லாம் அறியும் பொது மக்கள், இந்த ரெய்டை வரவேற்கின்றனர்.
சாதாரண சி.டி., கடை வைத்திருந்த சசிகலாவுக்கு எப்படி இத்தனை பெரிய சொத்து வந்தது? கர்சன் எஸ்டேட் விவரங்களையெல்லாம் பார்க்கும் பொது மக்கள், சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஆத்திரத்தில் பொங்குகின்றனர்.இந்த ரெய்டால் தங்கள் மீது மக்களுக்கு பரிதாபம் ஏற்பட்டிருப்பதாக, தினகரன் தரப்பு நினைத்துக் கொண்டிருந்தாலும், நிஜத்தில் அப்படி இல்லை.இப்படிப்பட்ட சூழலில், இந்த ரெய்டை ஆதரிப்பது போல வெளியே கருத்துச் சொல்வதுதான், பழனிச்சாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கு இருக்கும் ஒரே வழி. ஆனால், அப்படி சொன்னால், நேற்று வரை, சசிகலாவுக்கு துதி பாடி, அமைச்சர்களாக இருந்து கொண்டு, லஞ்சம்-ஊழல் தழைக்க, கமிஷன் வாங்கிக் கொடுத்து, கமிஷன் பெற்றவர்கள்தானே இவர்கள். இப்படிப்பட்டவர்கள், நியாயவாதிகள் போல பேசுகிறார்களே என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும். அதற்கு நாமே இடம் கொடுத்துவிடக் கூடாது.
அதனால், ரெய்டை ஆதரிப்பது போலவோ, எதிர்ப்பது போலவோ எந்தக் கருத்தையும், நம் அமைச்சர்கள், தலைவர்கள் யாரும் சொல்ல வேண்டாம் என, முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதனால்தான், ரெய்டு தொடர்பாக, அ.தி.மு.க., தரப்பு அடக்கி வாசிக்கிறது.இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
Comments