
சல்லடை போல் சலித்த அதிகாரிகள் இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆகரவாளர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடைபெற்றது. அப்போது சுமார் ரூ.1000 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. ரூ.1,400 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.7 கோடி ரொக்கம், ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஐடி அதிகாரிகள் சோதனை 5 நாள்கள் நடைபெற்ற தொடர் சோதனையால் ஆடி போயிருந்த சசிகலா, விவேக், தினகரன் உள்ளிட்டோருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்தனர் வருமான வரித் துறை அதிகாரிகள். அதாவது போயஸ் கார்டனில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஜெயலலிதா தங்கியிருந்த அறை தவிர்த்து சசிகலா தங்கியிருந்த அறை, பூங்குன்றன் தங்கியிருந்த அறை என விடாமல் தேடினர்.
கம்ப்யூட்டர் பூங்குன்றன் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கம்ப்யூட்டர்களும், சில ஹார்டு டிஸ்க்களும் கிடைக்கப் பெற்றன. அதில் ஜெயலலிதா- சசிகலாவின் பினாமிகளின் பெயர் பட்டியல் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணை ஜெயலலிதா- சசிகலாவின் பினாமிகள் வைத்துள்ள சொத்து பட்டியலை வைத்து அந்த நபர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். போயஸ் கார்டனுக்கு யாரும் வரமாட்டார்கள் எந்த தைரியத்தால் அங்கு பல உண்மைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவை ஒவ்வொன்றாக புற்றில் இருந்து ஈசல் கிளம்புவதை போல் கிளம்புகின்றன.
Comments