இலங்கை அருகே நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்த தாழ்வு நிலை, அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் குமரி லட்சத்தீவு கடல் பகுதியில் அரிய புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று இரவு, நாளை மற்றும் டிச., 1ம் தேதியும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதே போல் டிச., 4ம் தேதி முதல், 6ம் தேதி வரை சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று இரவு முதல் மழை பெய்ய துவங்கலாம். நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உண்டு.
மதுரையிலும் மழை உண்டு
கன்னியாகுமரி, நெல்லை, தேனி மற்றும் தூத்துக்குடியில் கனமழை பெய்யும். இதுதவிர, விருதுநகர், ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி மற்றும் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் பகுதிகளிலும் ஒரு நாள் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. குறைந்த அழுத்த தாழ்வு நிலை குமரி கடலில் இருந்து அரபி கடலுக்குள் நுழையும் போது நீலகிரி பகுதியிலும் குறிப்பாக குன்னூர் பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
பல மாதங்களுக்கு பிறகு
இன்று இரவு முதல் டிச., 1ம் தேதி வரை கன்னியாகுமரி, நெல்லை, தேனி மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும். குறிப்பாக, கோதையாறு - பேச்சிபாறை - குலசேகரம் பகுதியில் கனமழை இருக்கும். பல மாதங்களுக்கு பிறகு தென் மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரவு அல்லது நாளை காலை முதல் டிச., 1ம் தேதி வரை மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது.
Comments