
மேலும் ஜில் ஜில் கிளைமேட்டும் பலருக்கு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்துவதால் பெரும்பாலான மக்கள் இப்போதிலிருந்தே அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பத் தொடங்கியுள்ளனர். வாரத்தின் தொடக்க நாள், மழை இரண்டு காரணங்கள் போதாதா சென்னை நகர போக்குவரத்து நெரிசலுக்கு, அது தான் இப்போதில் இருந்து சென்னையின் பெரும்பாலான சாலைகள் வாகனங்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அண்ணா சாலை முதல் ஆலந்தூர் வரையிலான சாலைகளில் வாகன போக்குவரத்து நத்தை மாதிரி தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதே போன்று அண்ணா சாலை வழியாக எல்டாம்ஸ் ரோடுஇ, பாரதிதாசன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, க்ரீம்ஸ் சாலை, டாம்ஸ் சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து மந்தமாகவே உள்ளது. கோடம்பாக்கம் ஹைரோடு முதல் வடக்கு உஸ்மான் சாலை வரையிலும் போக்குவரத்து மந்தமாகவே உள்ளது. மகாலிங்கபுரம் சாலை, எம்எம் சாலையிலும் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் ஆமை வேகத்தில் தான் வாகனங்கள் நகர்கின்றன. நுங்கம்பாக்கம் ஹைரோடு முதல் கோடம்பாக்கம் சாலை வரை மற்றும் அண்ணா சாலை, கதீர்ட்ரல் இணைப்புச் சாலையில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்லவன் சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு மற்றும் பெரம்பூர் ஹைரோடு முதல் மாதவரம் ஹைரோடு வரையிலான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. எழும்பூர் பாந்தியன் சாலை அசோக் நகர் மெயின் ரோடு முதல் பில்லர் வரையிலான சாலை பெசன்ட் நகர் பிரதான சாலை, திநகர் உஸ்மான் சாலையிலும் வாகனங்கள் சாலையில் வரிசைகட்டி காத்திருக்கின்றன. எண்ணூர் ஹைரோடு, ரெட் ஹில்ஸ் சாலை மற்றும் அம்பத்தூர் சாலையிலும் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மழை மற்றும் சேதமடைந்த சாலைகள், சிக்னல் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, ஆங்காங்கே போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் உள்ள காவலர்கள் போக்குவரத் சீராக்குவதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர்.
Comments