சென்னை அறிவாலயத்தில், நிருபர்களிடம் கூறியதாவது:சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், தி.மு.க., சார்பில், மருதுகணேஷ் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகள் ஆதரவுடன், அவர் போட்டியிடுகிறார். மேலும், பல கட்சிகள், தி.மு.க., வேட்பாளருக்கு, தங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தர வேண்டும் என, தி.மு.க., சார்பில் வலியுறுத்துவோம்.
ஏற்கனவே, முதல்வர், அமைச்சர்கள், இந்த தொகுதி யில் பணம் வினியோகம் செய்த புகார், நிலுவை யில் உள்ளது.தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால், நீதிமன்றத்தை நாடினோம். இந்த நிலை யில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனநாயக முறைப்படி, இடைத்தேர்தலை எதிர் கொள்வோம். கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு, தி.மு.க., மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
எம்.ஜி.ஆர்., இருந்தபோதும், ஜெ., இருந்த போதும், இரட்டை இலை சின்னத்தை தோற்கடித்து உள்ளோம். பல முறை இரட்டை இலை சின்னத்தை தோற்கடித்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே, சின்னம் குறித்து, துளியளவு கவலையும் இல்லை.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
Comments