
அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, யாரால் இந்த சோதனை நடைபெற்றது என்று அனைவருக்கும் தெரியும் என்றார். ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை கோவிலாக கருதுவதனால்தான் நினைவு இல்லமாக அறிவித்தோம். ஆனால் அளவிற்கு அதிகமாக வரிஏய்ப்பு செய்து சொத்து சேர்த்தவர்களை வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். வருமானவரித்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சோதனைக்கும், மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. போயஸ்கார்டனில் என்ன சோதனை நடந்தது என்று யாருக்கும் தெரியாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். போயஸ்கார்டனில் நேற்று நடந்த சோதனை பற்றி இதுவரை வாய் திறக்காமல் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக மவுனம் கலைந்துள்ளார்.
Comments